உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தந்தை - மகன் ரயில் மோதி பலி

தந்தை - மகன் ரயில் மோதி பலி

திருவலம்: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 39; திருவலம் சுண்ணாம்புக்கார தெருவில் குடும்பத்தினருடன் தங்கி, ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது மகன் கிஷோர், 18. தந்தை, மகன் நேற்று முன்தினம் இரவு, திருவலம் - முகுந்தராய புரம் இடையே ரயில்வே தண்டவாளத்தை கடந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ரயில், இருவர் மீதும் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட தந்தை, மகன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காட்பாடி போலீசார் இருவரின் உடலையும் மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ