உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ஜாமின் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன்

ஜாமின் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன்

தஞ்சாவூர்:தன்னை ஜாமினில் எடுக்க தாமதம் செய்த மனைவிக்கு, பூச்சிக்கொல்லி மாத்திரையை கொடுத்து, கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 50. இவரது மனைவி சரஸ்வதி, 47. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் பாகம்பிரியாள் திருமணமாகி அதிராம்பட்டினத்தில் வசிக்கிறார். பால்ராஜ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் வழக்கு ஒன்றில் சிக்கி சிறை சென்ற நிலையில், தன்னை ஜாமினில் எடுக்க, சரஸ்வதியிடம் கூறியுள்ளார். இதில், காலதாமதம் ஏற்பட்டது. ஜாமினில் வந்த அவர், சரஸ்வதியிடம் தாமதத்துக்காக தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் பால்ராஜ், பூச்சிக்கொல்லி மாத்திரையை வாங்கி வந்து, வீட்டில் இருந்த சரஸ்வதி வாயில், வலுக்கட்டாயமாக அந்த மாத்திரையை போட்டு, தண்ணீரை ஊற்றி விழுங்க வைத்துள்ளார்.சரஸ்வதியின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விசாரித்தனர். சரஸ்வதி நடந்ததை கூறி அழுதுள்ளார். உடன், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சரஸ்வதி இறந்தார். பட்டுக்கோட்டை தாலுகா போலீசில், பாகம்பிரியாள் அளித்த புகாரில் பால்ராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை