மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் கல்லுக்குளம் பகுதியில் செயல்படும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், 2023ம் ஆண்டு, மத்திய அரசின் மருத்துவக் குழுவினரால் தேசிய தரச் சான்று பெற்றது. அதற்காக வழங்கப்பட்ட 3 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, மருத்துவமனை வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது.தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், ஒவ்வொரு மாதமும், சுகாதார குறியீடுகளின் அடிப்படையில், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான தர வரிசை பட்டியலில், கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மாநில அளவில், தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடம் பெற்றுள்ளது.இதையடுத்து, அந்த ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் சீர்வரிசைகளுடன் பாராட்டப்பட்டனர்.மாநகராட்சி சார்பில், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம், கமிஷனர் மகேஸ்வரி, நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி மற்றும் கவுன்சிலர்கள் மலர் மாலைகள், இனிப்புகளுடன், மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.பின், கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் முத்துக்குமார் தலைமையிலான டாக்டர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் 30 பேருக்கும் மாலை அணிவித்து, சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025