உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மனநலம் பாதித்த பெண் கணவனிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதித்த பெண் கணவனிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், 1 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையுடன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிவதாக, அப்பகுதியினர் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு தகவல் அளித்தனர்.இதன்படி, 2024 அக்., 29ம் தேதி, ஒருங்கிணைந்த சேவை மையம் வாயிலாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குழந்தை மீட்கப்பட்டனர். பெண்ணுக்கு, தஞ்சாவூர் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் எட்டு மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.விசாரணையில், பீஹார் மாநிலம், நவாடா மாவட்டம், கோண்டாபூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மனைவி முன்னிதேவி, 30, என, தெரியவந்தது. இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருணம் நடந்து, சுகானா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஒரிரு மாதங்களில், முன்னிதேவிக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு, குழந்தையுடன் பாபநாசத்திற்கு வந்தது தெரியவந்தது.போலீசார் உதவியுடன், பிரகாஷ் மற்றும் அவரது உறவினர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வரவழைக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து, முன்னிதேவியை அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழியனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி