உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கொளுத்தும் வெயிலில் ரெயின்கோட்: அமைச்சர் செழியன் தொலைநோக்கு

கொளுத்தும் வெயிலில் ரெயின்கோட்: அமைச்சர் செழியன் தொலைநோக்கு

தஞ்சாவூர் : மழைக்காலம் துவங்க பல மாதங்கள் உள்ள நிலையில், கொளுத்தும் வெயிலில், பால் வியாபாரிகளுக்கு அமைச்சர் கோவி. செழியன், 'ரெயின் கோட்' வழங்கியது பேசு பொருளாகியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், நேற்று முன்தினம் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தன் சொந்த நிதியிலிருந்து, 130 பால் விற்பனையாளர்களுக்கு ரெயின் கோட் வழங்கினார்.மழைக்காலம் துவங்க இன்னும் பல மாதங்கள் உள்ள சூழலில், கொளுத்தும் வெயிலில் ரெயின் கோட் வழங்கியது, தொகுதி மக்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. 'அமைச்சர் இதுபோன்று, 'தொலைநோக்கு' எண்ணத்துடன் திட்டங்களை செயல்படுத்தினால், தொகுதி இன்னும் சிறப்பாக இருக்கும்' என, பொதுமக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Bhakt
ஏப் 08, 2025 20:41

இவர்கள் தெர்மாகோல்ன்னு கலாய்க்கிறாங்க


Indhuindian
ஏப் 08, 2025 18:20

counter part of Themocol Raju in DMK- Rain Coat Chezhian


Shankar
ஏப் 08, 2025 15:38

ரெயின்கோட் தயாரிக்கிறவன் பெருஸ்ஸா அமைச்சரை கவனிச்சிருப்பான். அதான் எப்பவோ வரப்போகும் மழைக்கு இப்போ ரெயின்கோட் கொடுத்திருக்கார்.


Oru Indiyan
ஏப் 08, 2025 11:13

ரெயின் கோட்டுக்கு தமிழாக்கம் என்ன சொல்லு அமைச்சரே


Kjp
ஏப் 08, 2025 10:28

அப்போ வெயிலில் வாடும் மக்களுக்கு சுடு தண்ணீர் கொடுத்தால் நல்லது.


rasaa
ஏப் 08, 2025 10:22

செல்லூலாரின் தம்பியோ?


Venkateswaran Rajaram
ஏப் 08, 2025 09:57

சொந்த நிதி என்றால் இவர் அப்பா வீட்டு பணமா..... மக்கள் வரிப்பணம்


M Selvaraaj Prabu
ஏப் 08, 2025 09:49

அதனால் என்ன? வீணாய்ப் போகும் பொருளில்லையே கொடுப்பதை வாங்கி வைத்து கொண்டு தேவைப்படும் போது உபயோகப்படுத்த வேண்டியதுதானே? தொலைநோக்கு பார்வை என்பதும் சரிதான். பாராட்டலாம், கலாய்க்க வேண்டியதில்லை.


rasaa
ஏப் 08, 2025 10:24

ஓ இப்படிகூட கலாய்க்கலாமோ? நன்றாக உள்ளதே. வாழ்த்துக்கள் நண்பரே.


சமீபத்திய செய்தி