மேலும் செய்திகள்
சாலை விபத்தில் தொழிலாளி பலி
13-Nov-2024
அய்யம்பேட்டை,: தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை ரயிலடி பகுதியைச் சேர்ந்தவர் பைசல், 52. இவர் தன் பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக நேற்று ஐந்து தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.நேற்று மாலை முதல் தளத்தில் நின்று, தொழிலாளர்கள் மேலே உள்ள கட்டடங்களை இடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சக்கராப்பள்ளியைச் சேர்ந்த மணிகண்டன், 30, அய்யம்பேட்டையைச் சேர்ந்த குமார், 23, ஆகியோர் மீது, கட்டடத்தின், 'ஸ்லாப்' விழுந்ததில் இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். போலீசார் இருவரது உடலையும் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அய்யம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
13-Nov-2024