மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த நீவிகா, 16. பேராவூரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கு தந்தை இல்லாத நிலையில், தாய் துர்கா மட்டுமே உள்ளார்.அவரும் கூலி வேலை செய்து வருகிறார். நீவிகா வாலிபால் போட்டியில் மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி, மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்கு அனுப்ப மறுத்து, திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த நீவிகா, கடந்த 26ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் எழுதிய கடிதம் கிடைத்தாக உறவினர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, மாணவியர், அவர்களின் பெற்றோர், இறந்த மாணவியின் உறவினர்கள் நேற்று மதியம் பள்ளி முன் சாலையில் அமர்ந்து, தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.டி.ஓ., சுப்பிரமணியன், கல்வித்துறை அதிகாரிகள், போலீசார், சமாதானம் செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது குறித்து தலைமை ஆசிரியை தனலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது: மாணவியருக்கு தனிநபர் பயிற்சி அளித்து வருகின்றனர். இரவு 7:00 மணி வரை பயிற்சி அளிப்பதால் பாதுகாப்பு கிடையாது என கூறினேன்.விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இறந்த மாணவிக்கு குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக மாணவியர் தெரிவித்தனர். என்னால் எந்த பிரச்னையும் இல்லை. மாணவியும் அவருக்கு இருந்த தனிப்பட்ட பிரச்னையை என்னிடம் தெரிவிக்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025