உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / திருநங்கைக்கு தொல்லை போலீஸ்காரர் டிஸ்மிஸ்

திருநங்கைக்கு தொல்லை போலீஸ்காரர் டிஸ்மிஸ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகேயுள்ள பள்ளியக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் வினோத், 38. அய்யம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். 2023ல் அப்பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவரின் வீட்டிற்குள் ஒரு நாள் இரவு அத்துமீறி நுழைந்து, அவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுபற்றி வினோத் மீது போலீசில், திருநங்கை புகார் அளித்தார். வினோத் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில், துறை ரீதியான விசாரணை நடந்து வந்த நிலையில், திருவோணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும், அவர் முறையாக பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன், சம்பந்தப்பட்ட திருநங்கைக்கு வினோத் பாலியல் ரீதியாக தொந்தரவு தந்தது உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், வினோத்தை, 'டிஸ்மிஸ்' செய்து, தஞ்சை மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை