வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கொஞ்சநாள் பொறுங்க. அந்த மூணு பஸ்களும் டயர் கழண்டு, ஒரேக் டவுனாயி நின்னுடும். அப்புறம் நீங்கதான் ரூட் தல.
தஞ்சாவூர்:தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்துக்கு, 1 டூ 1 பஸ்களை, கடந்த 13ம் தேதி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் என்ற முறையில், மூன்று பஸ் சேவையை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். இதனால், தனியார் பஸ்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.நேற்று திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர்கள், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் பீட்டர் தலைமையில், தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், அவர்களிடம் பேச்சு நடத்தினர்.அப்போது, 1 டூ 1 பஸ்களை வரவேற்பதாகவும், முறையாக கால அட்டவணைப்படி இயக்கவும், தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் இயக்கவும், பர்மிட் பெறவும் அவர்கள் வலியுறுத்தினர்.
கொஞ்சநாள் பொறுங்க. அந்த மூணு பஸ்களும் டயர் கழண்டு, ஒரேக் டவுனாயி நின்னுடும். அப்புறம் நீங்கதான் ரூட் தல.