தாது மணல் எடுக்க எதிர்ப்பு
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தில் தனிநபர் ஒருவர், தன் வயலில் தாது மணல் எடுப்பதற்காக, அரசிடம் அனுமதி பெற்றுள்ளார். மலை போல மணல் அள்ள துவங்கியதால், கிராம மக்களின் எதிர்ப்பால், பணிகள் நிறுத்தப்பட்டன.இந்நிலையில், மீண்டும் மணல் எடுப்பதற்கான பணியை நேற்று துவங்க இருந்தனர். இதை அறிந்த தம்பிக்கோட்டை கீழக்காடு, வடகாடு, மறவக்காடு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 7:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதிகாரிகள், மக்களிடம் பேச்சு நடத்தினர். அதில், அக்., 16 வரை மணல் அள்ளப்படாது என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, கிராம மக்கள் போராட்டதை கைவிட்டு சென்றனர்.