உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சையில் சலங்கை நாதம் விழா கோலாகலம்

தஞ்சையில் சலங்கை நாதம் விழா கோலாகலம்

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் மத்திய கலாசார துறை அமைச்சகத்தின் கீழ், தென்னக பண்பாட்டு மையம், தமிழகம், கேளரா, கர்நாடகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் தீவுகளை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் சலங்கை நாதம் விழா ஒரு வாரம் நடைபெறும். இந்நிலையில், 2018-ல் கஜா புயல் தாக்கம், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக சலங்கை நாதம் கலை விழா நடைபெறாமல் இருந்தது.ஆறு ஆண்டுகளுக்கு பின் நேற்று மாலை இவ்விழா துவங்கியது. மே 18 வரை சலங்கை நாதம் நடைபெறுகிறது. விழாவை, தி.மு.க., - எம்.பி., முரசொலி, மத்திய கலாசார துறை இயக்குநர் பல்லவி பிரசாந்த் ஹோல்கர் உள்ளிட்டோர் முரசு கொட்டி துவக்கி வைத்தனர்.பல்லவி பிரசாந்த் ஹோல்கர் பேசியதாவது:மத்திய கலாசார துறை சார்பில் நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து வரும் 18ம் தேதி வரை நாட்டின் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இங்கு பங்கேற்கும் கலைஞர்களுக்கு அமைச்சகம் சார்பில் ஊக்கத்தொகை தற்போது உயர்த்தி வழங்கி, கலைகளை ஊக்கப்படுத்தி வருகிறது. இங்கு நடைபெறும் விழாவினை பார்க்க பொதுமக்களிடமிருந்து சிறிய அளவிலான தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நிகழ்ச்சி பராமரிக்க இந்த தொகை உதவியாக இருக்கும், வரும் 9 நாட்களுக்கும் நடைபெறும் இவ்விழாவினை பொதுமக்கள் அதிகமானோர் பங்கேற்று கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் சீர்மவுரி நாட்டி, திரிபுரா மாநில சங்கராய்,குஜராத் மாநில தாண்டியா, கர்நாடகா மாநில பூஜா குனித, கேரளா மாநில கொல்கலி, தமிழ்நாட்டின் மாற்றுதிறனாளிகளின் கர்நாடக சங்கீதம், தப்பாட்டம், கரகம்,காவடி ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் 110 கலைஞர்கள் பங்கேற்றனர். இதில், அகில இந்திய கைவினை பொருட்கள் கண்காட்சியும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை