உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / உடற்கல்வி ஆசிரியர் கழக 44வது பொதுக்குழு கூட்டம்

உடற்கல்வி ஆசிரியர் கழக 44வது பொதுக்குழு கூட்டம்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் கழகத்தின் 44வது பொதுக்குழு கூட்டம் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.பொதுக்குழு கூட்டத்திற்கு காந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மதுமதி முன்னிலை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சாந்தமூர்த்தி பேசினார். புதிய பொதுச்செயலாளர்களாக குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் துரைராஜ், உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் ஆகியோர் பொருப்பேற்றனர்.இந்த பொதுக்குழு கூட்டத்தில் 136 மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்தாண்டு கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகளை குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.அதேபோல், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை பட்டுக்கோட்டை வட்டம், பேராவூரணி வட்டம், ஒரத்தநாடு வட்டம் என பிரிக்கப்பட்டு விளையாட்டு போட்டி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியரும், உடற்கல்வி கழக செயலாளருமான ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ