| ADDED : ஆக 30, 2011 12:02 AM
தஞ்சாவூர்: 'வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தினால், ஹோட்டல், திருமண மண்டபம் உரிமை ரத்து செய்யப்படும்' என தஞ்சை கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் சுவாமிமலை கிராமம் திருமஞ்சன வீதியில் உள்ள வசந்த மஹால் திருமண மண்டபத்தில் மூன்று வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள், கம்மவர் நாயுடு திருமண மண்டபத்தில் ஆறு காஸ் சிலிண்டர்கள், ராஜவீதி வசந்த மஹால் திருமண மண்டபத்தில் இரண்டு காஸ் சிலிண்டர்கள் என மொத்தம் 11 சிலிண்டர்கள் வட்ட வழங்கல் அலுவலரால் கைப்பற்றப்பட்டது.
மண்டப உரிமையாளர் சாகுல்ஹமீது என்பவர் மீது வழக்கு தொரப்பட்டுள்ளது. எனவே, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வணிக நோக்கத்துக்கு பயன்படுத்தும் பலாகரக் கடைகள், திருமண மண்டபங்கள், ஹோட்டல் உரிமையாளர் மீது தமிழக அரசு இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955 மற்றும் திரவ எரிவாயு (வணிகம் மற்றும் ஒழுங்கு) ஆணை 2000த்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். நிறுவனங்களின் உரிமையும் ரத்து செய்யப்படும்.