உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / இலவச எம்ப்ராய்டரிங் பயிற்சி குடந்தையில் மாணவியர் பங்கேற்பு

இலவச எம்ப்ராய்டரிங் பயிற்சி குடந்தையில் மாணவியர் பங்கேற்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் ஸ்ரீஉப்பிலி தையல் பயிற்சி நிறுவனமும், சிட்டி யூனியன் வங்கி கிளையும் இணைந்து இலவச எம்ப்ராய்டரிங் பயிற்சி கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் இரண்டு நாட்கள் நடத்தியது. கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவியர் இலவச பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர். பயிற்சி முகாமில் சங்கிலித்தையல், காம்புத்தையல், சீப்பு தையல், மீன்முள் தையல், அடைப்புத்தையல் என பல்வேறு எம்ப்ராய்டரிங் பயிற்சிகள் சொல்லித்தந்தனர்.பயிற்சி முடிவில் மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சிட்டி யூனியன் வங்கி நாச்சியார்கோவில் கிளை மேலாளர் கிருத்திகா தலைமை வகித்தார். நாச்சியார்கோவில் ஸ்ரீஉப்பிலி தையல் பயிற்சி நிர்வாகி சந்திரா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகந்நாதன் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை நாச்சியார்கோவில் சிட்டி யூனியன் வங்கியும், உப்பிலி தையல் பயிற்சி நிறுவனத்தினரும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி