மேலும் செய்திகள்
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு போக்சோ
19-Sep-2025
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் சுதந்திரதின பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அனைத்து சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து கோவிலில் பொதுவிருந்து நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., தவமணி, முன்னாள் அறங்காவலர்குழு தலைவர் செல்வராஜ், அறநிலையத்துறை ஆய்வாளர் கண்ணன், வி.ஏ.ஓ., கோவிந்தராஜ், முன்னாள் அறங்காவலர்கள் முத்தரசு, ஜெயலட்சுமிவடிவேல், வைரவேல், சிங்காரவேல் உள்ளிட்ட திரளான அதிமுக பிரமுகர்கள் பங்கேற்றனர். பொதுவிருந்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சாப்பிட்டனர். ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் மோகனசுந்தரம் மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்திருந்தனர். திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன்கோவில் வேங்கடாசலபதி சுவாமிகோவிலில் நேற்று முன்தினம் நடந்த சுதந்திரதின பொதுவிருந்தில் திரளான அதிமுக பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி கமிஷனர் பரணீதரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசபெருமாள் கோவிலில் சுதந்திரதின பொதுவிருந்து நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடும், தொடர்ந்து பொதுவிருந்து நிகழ்ச்சியில் ஒன்றிய அ.தி.மு.க., துணை செயலாளர் சூரியமூர்த்தி, முன்னாள் அறங்காவலர் கூகூர் இளங்கோவன், திருநரையூர் முன்னாள் பஞ்., தலைவர் பாண்டியராஜன், பஞ்., செயலாளர் நெல்லைகண்ணன், மாத்தூர் சார்லஸ், நாச்சியார்கோவில் சுழட்டிசுப்ரமணியன், சந்திரசேகரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025
19-Sep-2025