மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
தஞ்சாவூர்: தமிழக அரசு அறிவித்துள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்திலேயே பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் திட்டம் குறித்து கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விபரம்:விவசாயம் மற்றும் இதர நிலங்களை வாங்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் வாங்கிய சொத்துக்கான நில உடைமைப்பட்டாவை தங்கள் பெயரில் மாற்றிக் கொள்ள இதுவரை தாலுக்கா அலுவலகத்துக்கு அலைய வேண்டிய நிலையை மாற்றி அத்தகைய மனுக்களை தத்தம் கிராமங்களிலே வி.ஏ.ஓ., அலுவலகத்தில் அளிக்க தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பட்டா மாறுதல் கோரும் மனுக்களை ஒவ்வொரு திங்கள் அன்றும் மட்டும் வி.ஏ.ஓ., தன் அலுவலகத்தில் காலை 10 மணியிலிருந்து பெற்றுக் கொள்வார். அவரே வேறு ஒரு கிராமத்துக்கு கூடுதல் பொறுப்பு வகித்தால் அந்த கிராமத்துக்கு செவ்வாய் சென்று மனுக்களை பெற்றுக் கொள்வார்.வி.ஏ.ஓ.,விடம் அளிக்கப்படும் பட்டா மாறுதல் மனுக்களுக்கு உடனடியாக அச்சிட்ட ஒப்புகைச் சீட்டு வி.ஏ.ஓ.,வால் வழங்கப்படும். மனுதாரர் வி.ஏ.ஓ.,விடம் பட்டா மாற்றம் கோரும் மனுவுடன் கிரய ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல் மற்றும் மூல ஆவணங்களின் நகல்களை இணைத்து அளிக்க வேண்டும். மனு கொடுத்தவர் பட்டா மாறுதல் கேட்கும் சொத்து உட்பிரிவு எதுவும் செய்திட தேவையின்றி தனிப்பட்டா அல்லது கூட்டுப்பட்டா ஆணையிட வேண்டிய இனமாக இருந்தால் மாதத்தின் இரண்டாவது வெள்ளி தொடர்புடைய வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாரை மூல ஆவணங்களுடன் அணுகி பட்டா மாற்ற உத்தரவை பெற்றுக் கொள்ளலாம்.அதேபோல், தான் வாங்கிய சொத்து பகுதியாக இருந்து உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய தேவை என்றால் நான்காவது வெள்ளி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள நில அளவைப்பிரிவு தலைமை அளவரை அணுக வேண்டும். பட்டா மாறுதல் மனுவை வி.ஏ.ஓ.,விடம் அளிக்கும் போது மனுதாரர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. உட்பிரிவு செய்ய தேவையான இனங்களில் மட்டும் உட்பிரிவு கட்டணமாக ஒரு உட்பிரிவுக்கு 40 ரூபாய் வீதம் பட்டா மாறுதல் ஆணையை பெறும்போது வட்ட அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025