கும்பகோணம்: கும்பகோணம் பஞ்., யூனியனில் நேற்று ஒன்றிய கவுன்சிலர், பஞ்., தலைவர் பதவிக்கு 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கும்பகோணம் பஞ்., யூனியனில் நேற்று காலை முதல் வேட்புமனுதாக்கல் செய்ய ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பகுதிகளிலிருந்து வேன், டிராக்டர், லோடு ஆட்டோ ஆகியவற்றில் வந்தனர். இதனால் கும்பகோணம் காரைக்கால் சாலையில் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னர் போலீஸார் துணையோடு சீரமைக்கப்பட்டது. அதன்படி, கும்பகோணம் பஞ்., யூனியனுக்குட்பட்ட 27 ஒன்றியகுழு உறுப்பினர் பதவிக்கு நேற்று, வார்டு எண் 2 (அணைக்குடி) மருதையன், காமராஜ், வார்டு எண் 8 (கீழபுளியம்பேட்டை) மோகன், முருகன், வார்டுஎண் 12 (செட்டிமண்டபம்) பரமேஸ்வரி, வார்டு எண் 18, (திருவலஞ்சுழி) கலைநிதி, வார்டு எண் 20 (பட்டீஸ்வரம்) பஞ்சாபிகேசன், ராஜாராமன், மதியழகன், வார்டு எண் 22 (அண்ணல்அக்ரஹாரம்) ராமையன், வார்டு எண் 27 (தில்லையம்பூர்) லெனின் ஆகிய 11 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
கும்பகோணம் யூனியனில் உள்ள 47 கிராம பஞ்சாயத்துகளுக்கு பஞ்., தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்கள் விவரம்: அண்ணல்அக்ரஹாம் குருசாமி, ஆரியபடைவீடு ஜமுனா, அகராத்தூர் ஜெகநாதன், செந்தில்குமார், செல்வம், குருநாதன், அணைக்குடி ராமச்சந்திரன், தீபா, அத்தியூர் தமிழ்செல்வி. பாபுராஜபுரம் கேசவன், செல்வராஜ், ஏரகரம் செல்வி, ரமேஷ், இன்னம்பூர் கோமதி, ராதா, ராமதிலகம், எழிலரசி, கொ.கருப்பூர் முருகன், கொற்கை சுகுமார், கடிச்சம்பாடி பட்டாபிராமன், கள்ளபுலியூர் கேசவமூர்த்தி, மீரா, ரேவதி, கந்தசாமி, கோவிலாச்சேரி ரகுநாதன், ஜெயராமன், சுதாகர், கொத்தங்குடி மீனா, மானம்பாடி பிலவேந்திரன், செந்தில், நாககுடி கோவிந்தசாமி, சேங்கனூர் இளவளகன், சுந்தரபெருமாள்கோயில் பஞ்சவர்ணம் ஜெயந்தி. தேனாம்படுகை சுசிலா, திப்பிராஜபுரம் தனபாலன், திருவலஞ்சுழி குருசாமி, ஜெகதீசன், உடையாளூர் பரணி, கார்த்தி, உத்தமதானி ஜெயபால், அன்பழகன், வாளாபுரம் முத்தையன், விளந்தகண்டம் மலர்விழி, நூர்ஜஹான்பீவி, நீலத்தநல்லூர் பரணிதரன், கார்த்திகேயன், பட்டீஸ்வரம் கவிதா, செல்வராணி, புத்தூர் ராஜேந்திரன், எழிலரசன், உதயகுமார் ஆகிய 53 பேரும் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.