உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சை நகராட்சிக்கு தேவையான மின்னணு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் துவக்கம்

தஞ்சை நகராட்சிக்கு தேவையான மின்னணு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் துவக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடப்பதை தொடர்ந்து 148 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 148 வாக்குசாவடிகளில் நகராட்சி தலைவர் தேர்தல் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் தேர்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நகராட்சிக்கு 357 கலெக்டரால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவை திருவையாறு வைப்பறையில் இருந்து பகிர்ந்து எடுத்து கொள்ள உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து 25ம் தேதி தஞ்சாவூர் நகராட்சியில் இருந்து நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர், நகரமைப்பு அலுவலர் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் திருவையாறு வைப்பறைக்கு சென்று 357 எண்ணிக்கை மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை எடுத்து வந்து தஞ்சாவூர் நகராட்சி அலுவலகத்தில் போலீஸார் பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று 26ம் காலை 10 மணிக்கு கலெக்டர் பாஸ்கரவ் நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை பார்வையிட்டார். அதன் பின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட், பெங்களுர் நிறுவனத்தில் இருந்து வந்த அலுவலர்களால் சரிபார்த்து சான்று அளிக்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் தேர்தலை நல்ல முறையில் நடத்துவது தொடர்பாக நகராட்சி ஆணையர் ஜானகி, நகராட்சி பொறியாளர் கருணாகரன் மற்றும் மேலாளர் மேத்யூ ஜோசப் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ