| ADDED : பிப் 12, 2024 11:19 PM
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில், 4.98 லட்சம் ரூபாய் செலவில் இலவச கழிப்பறைகள் அமைக்கப்பட்டன.இவற்றில் சிறுநீர் கழிப்பதற்காக சுவரில், 20க்கும் மேற்பட்ட பீங்கான் கோப்பைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் அடித்து நொறுக்கினார். தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள் விசாரித்தனர். நகர மேற்கு போலீசில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ரஞ்சிக்குமார் புகார் அளித்தார். அவற்றை உடைத்தவர், தஞ்சை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த செல்வம், 43, என தெரிய வந்தது. குடி போதையில் அடித்து நொறுக்கியதாகக் கூறி, அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.