உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனை: பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி கலைஞர்கள் இசையஞ்சலி

திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனை: பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி கலைஞர்கள் இசையஞ்சலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜர் ஆராதனை விழாவில், பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர்.திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா, கடந்த 26ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் பாடியும், இசைத்தும் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.ஆராதனை விழாவின் நிறைவு நாளான இன்று (30ம் தேதி) பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணிக்கு உஞ்சவிருத்தி நிகழ்ச்சியான சுவாமி வீதியுலா நடைபெற்றது. காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை நாதஸ்வரம் நிகழ்ச்சி நடந்தது. 9:00 மணியளவில் பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. பின்னர், நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக' என்ற பாடல் பாடப்பட்டது.இதைத் தொடர்ந்து, கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ராக கனகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களை பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, கடலூர் ஜனனி, ஓ.எஸ்.அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், சீர்காழி சிவசிதம்பரம், உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு பல்வேறு வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாரதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஜன 30, 2024 16:37

உலகத்திலேயே வேறெங்கும் நடக்காத இசையஞ்சலி நிகழ்வு. இதே போல ஆந்திர அரசும் தமிழக இசை வாக்கேயக்காரர்களுக்கு விழா எடுக்க வேண்டும்.


Ramesh Sargam
ஜன 30, 2024 11:17

ஸ்ரீசத்குரு தியாகராஜர் திருவடிகளே சரணம்.


Veeramani Shankar
ஜன 30, 2024 11:13

Thanks AIR, DD Tamil and of course Dinamalar for broading wonderful program. TRUE shraddhamjali to Satgir Thigabrahmam


மேலும் செய்திகள்