உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கீரியை வேட்டையாடிய மூவர் கைது

கீரியை வேட்டையாடிய மூவர் கைது

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் பகுதியில் சிலர் கொக்கு, கீரி போன்றவற்றை இறைச்சிக்காக வேட்டையாடி வருவதாக, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினருக்கு தகவல் கிடைத்தது.அப்போது, கீரிப்பிள்ளையை வேட்டையாடிய செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார், 27, பிரபு,39, சுரேஷ்,31, ஆகியோரை வனத்துறை அலுவலர்கள் பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, இறந்த இரு கீரிப்பிள்ளைகளை கைப்பற்றினர்.இதையடுத்து, அந்த மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில், 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி