உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / இளம்பெண் தற்கொலையில் மூன்று போலீசார் இடமாற்றம்

இளம்பெண் தற்கொலையில் மூன்று போலீசார் இடமாற்றம்

நடுக்காவேரி:இளம்பெண் தற்கொலை விவகாரத்தில், இரு எஸ்.ஐ.,க்கள், ஒரு பெண் ஏட்டு என, மூவர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவேரியை சேர்ந்த தினேஷ், 32, பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக, நடுக்காவேரி போலீசாரால், ஏப்., 8ல் கைது செய்யப்பட்டார். பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறி, தினேஷின் தங்கையர் மேனகா, 31, கீர்த்திகா, 29, போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடித்தனர். கீர்த்திகா உயிரிழந்தார். மேனகா சிகிச்சை பெறுகிறார்.இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் சர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். எஸ்.பி., ராஜாராம் உத்தரவில், எஸ்.ஐ.,க்கள் கலியபெருமாள் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன், அறிவழகன் வல்லம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஏட்டு மணிமேகலை திருவோணம் போலீஸ் ஸ்டேஷன் என, நேற்று முன்தினம் இட மாற்றம் செய்யப்பட்டனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று வரை எட்டாவது நாளாக கீர்த்திகா உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை