உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / நேர்மையாக பணியாற்றிய வி.ஏ.ஓ.,க்கு கிராம மக்கள் பாராட்டு

நேர்மையாக பணியாற்றிய வி.ஏ.ஓ.,க்கு கிராம மக்கள் பாராட்டு

தஞ்சாவூர்: நேர்மையாக பணியாற்றிய வி.ஏ.ஓ.,வுக்கு, கேடயம் வழங்கி , கொண்டவிட்டாந்திடல் கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தினர். தஞ்சாவூர், மானாங்கோரையை சேர்ந்த விக்னேஷ்வரன், 30, திருவையாறு தாலுகா, திருவேதிகுடியில் வி.ஏ.ஓ.,வாக ஆக., 1 முதல் பணியாற்றுகிறார். கடந்த, 2022 மு தல், 2025 ஜூலை, 31 வரை தஞ்சாவூர், கொண்டவிட்டாந்திடல் கிராமத்தில் விக்னேஷ்வரன் வி.ஏ.ஓ., ஆக பணியாற்றினார். அவர், அக்கிராம மக்களுக்கு, பல்வேறு துறை சான்றிதழ்கள் கிடைக்க உதவியாகவும், நேர்மையாகவும் பணியாற்றினார். இதற்கு, கொண்டவிட்டாந்திடல் கிராம மக்கள், அவருக்கு நேற்று பாராட்டு விழா நடத்தினர். விழாவில், 'நேர்மையின் சிகரம்' என்ற வார்த்தை பொறித்த கேடயத்தை வழங்கினர். கிராம மக்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் விக்னேஷ்வரன் மூன்று ஆண்டுகளாக பணியாற்றினார். அவர் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியதில்லை. விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு அரசின் திட்டங்களை தெரியபடுத்தி, வாய்ப்பை உருவாக்கி தந்தார்' என்றனர். விக்னேஷ்வரன் கூறுகையில், ''நேர்மையாக பணி செய்ய வேண்டும் என்பது என் லட்சியம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி