உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மணல் அள்ளிய வாகனங்கள் சிறை பிடித்த கிராம மக்கள்

மணல் அள்ளிய வாகனங்கள் சிறை பிடித்த கிராம மக்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறை பகுதியில், குடமுருட்டி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையை ஓட்டியுள்ள பகுதியில் மூன்று டிப்பர் லாரி, ஒரு ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் மணல் அள்ளுவதை கிராம மக்கள் சிலர் பார்த்துள்ளனர்.நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வாகனங்களை சிறைபிடித்து, மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்த நடுக்காவேரி போலீஸ் எஸ்.ஐ., மதியழகன் சம்பவ இடத்திற்கு சென்று, கிராம மக்களிடம் பேச்சு நடத்தினார்.அப்போது, 'தடுப்பணை பகுதியில் மணல் அள்ளியதால், களிமண் தெரிகிறது. இதனால், தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டு விவசாயம் பாதிக்கும். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கும்' எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.நீர்வளத்துறை காவிரி ஆறு செயற்பொறியாளர் சிவகுமார் மீண்டும் கிராம மக்களிடம் பேச்சு நடத்தினார்.அப்போது, 'அரசு பணிகளுக்காக மணல் தேவைப்படுவதால், தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்காக, தடுப்பணையின் மேட்டுப்பகுதியில் மட்டும் மணல் எடுக்கப்படுகிறது.மணல் திட்டுகள் இருக்கும் இடத்தில் மட்டுமே மணல் எடுத்துக் கொள்கிறோம். களிமண்ணாக இருந்தால் எடுக்க மாட்டோம்' என, வாக்குறுதி அளித்தனர்.இதையடுத்து, கிராம மக்கள் வாகனங்களை அனுப்பினர். இரண்டு நாட்களில் தேவையான மணல் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மீறி மணல் அள்ளினால் போராட்டத்தில் இறங்குவோம் என, கிராம மக்கள் எச்சரித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை