உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பைக்கில் வீலிங் சாகசம்: மக்கள் அச்சம்

பைக்கில் வீலிங் சாகசம்: மக்கள் அச்சம்

தஞ்சாவூர்,: தஞ்சாவூரில், ஆபத்தான முறையில் பைக்கில் இரவு நேரங்களில் சாகசம் செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.இந்நிலையில், புதிய பஸ் ஸ்டாண்ட் சாலை, திருச்சி - நாகை பைபாஸ், எஸ்.பி., அலுவலகம் உள்ள ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் ஆபத்தான முறையில் இளைஞர்கள் பைக்கில், 'வீலிங்' போன்ற சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், பீதியடைந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள சாலைகளில், ஆபத்தான முறையில் இளைஞர் குழுவினர் அதிவேகமாக பைக் ஓட்டி வீலிங் செய்து, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தாறுமாறாக பைக்கை ஓட்டி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு லைக் வாங்குவதற்காக, இளைஞர்கள், கல்லுாரி, பள்ளி மாணவர்கள் கூட பைக்கில் வீலிங் செய்யும் சம்பவம் தஞ்சாவூரில் அதிகரித்து விட்டது.இதில் கொடுமை, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், புதிய பஸ் ஸ்டாண்ட் சாலைகளில் தான் அதிகளவில் வீலிங் சாகசம் நடக்கிறது. இதில் கஞ்சா போதையும் வேறு. விபத்து ஏற்படும் முன்பு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை