உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓய்வு ராணுவ அதிகாரி வீட்டில் 14 பவுன் தங்க நகை திருட்டு

ஓய்வு ராணுவ அதிகாரி வீட்டில் 14 பவுன் தங்க நகை திருட்டு

கம்பம்:சின்னமனுாரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 14 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சின்னமனுார் சீப்பாலக்கோட்டை ரோடு முருகேசன் 66. இவர் தனது மனைவியுடன் ஊருக்கு சென்டு வீடு திரும்பினார். வீட்டில் டிரஸ்ஸிங் டேபிளில் வைத்திருந்த ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 14 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பாதிக்கப்பட்டவர் புகாரில் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததால் அதுகுறித்து எஸ்.ஐ. சுல்தான் பாட்சா விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ