உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா

அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், இணை உணவு பெறுபவர்களின் கருவிழி பதிவு செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் நாகலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் நாகலட்சுமி, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜெயபாண்டி, மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்ளிட்டோர் தர்ணாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை