உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வழிப்பறியில் சிக்கிய இளைஞர் மூதாட்டி கொலை வழக்கில் கைது

வழிப்பறியில் சிக்கிய இளைஞர் மூதாட்டி கொலை வழக்கில் கைது

சின்னமனுார்: தேனி மாவட்டம், குச்சனுார் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் குஞ்சரி, 60, என்ற மூதாட்டி, ஆக., 27ல் வீட்டிற்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இறந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் சின்னமனுார் போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.இந்நிலையில் ஆக., 28ல் அதே தெருவில் வசிக்கும் நாராயணசாமி மனைவி கல்யாணி, 60; வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபர் ஒருவர் சங்கிலி பறிக்க முயற்சி செய்தார். மூதாட்டி சத்தம் போட்டதில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த வாலிபரை பிடித்து சின்னமனுார் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் பிடிபட்டவர், போடியைச் சேர்ந்த சங்கரேஸ்வரன் மகன் ஸ்ரீதர், 23, என்பதும் தாய், தந்தை இல்லாததால் குச்சனுாரில் உள்ள பாட்டி வீட்டில் இருப்பதாகவும் கூறினார். போலீசார் வழிப்பறி வழக்கில் அவரை ரிமாண்ட் செய்தனர்.இறந்த மூதாட்டி, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அதன்படி, ஸ்ரீதரிடம் சின்னமனுார் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். அவர் மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனால் அவர் மீது பாலியல் பலாத்காரம், கொலை வழக்கு பதிவு செய்தனர்.ஸ்ரீதர் மீது ஏற்கனவே கோம்பை, சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷன்களில் தலா ஒரு வழக்கும், போடி தாலுகா ஸ்டேஷனில் ஐந்து வழக்குகளும் உள்ளன. சமீபத்தில், மேல்மருவத்துார் ஸ்டேஷனில் பதிவான வழக்கில் மூன்று மாதம் சென்னை சிறையில் இருந்துள்ளார் என்பது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ