மேலும் செய்திகள்
தமிழக லோக்சபா தொகுதிகள் குறைப்பு பச்சை பொய்
27-Feb-2025
போடி : ''தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதுடன், போதைப்பொருட்கள் நடமாட்டம், விலைவாசி, சொத்துவரி உயர்ந்துள்ளதால் மக்களின் அதிருப்தியை இந்த அரசு பெற்றுள்ளது,'' என, தேனியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.தேனியில் அ.தி.மு.க., சார்பில் மார்ச் 2 ல் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பங்கேற்கிறார். இதையொட்டி போடியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினார்.பின் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் மக்கள் விரோத தி.மு.க., அரசு மக்களாட்சி தத்துவத்துக்கு உள்ளே மன்னர் ஆட்சியை விதைக்கிற அரசாக உள்ளது. மத்திய அரசிடம் நிதியை பெற்றுத்தர முடியாத அரசாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாலிக்கு தங்கம், மடிக்கணினி உள்ளிட்ட பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.மின் கட்டணம், சொத்து வரி, கட்டுமானப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளதால் மக்களிடம் அதிருப்தியை தி.மு.க., அரசு பெற்று உள்ளது. இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் கவலை அவரை 'அப்பா' என்று அழைக்க வேண்டும் என்பதில் தான் உள்ளது. தமிழக மக்கள் அய்யோ என்று கூறும் அவல குரல் அவருக்கு கேட்கவில்லை. சட்டசபையில் எடுத்துச் சொன்னாலும் காது கொடுத்து கேட்பதில்லை. 2026 ல் தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியைப்பிடிக்கும் என்றார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஜக்கையன், ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27-Feb-2025