உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நான்கு சுற்றுலா பஸ்கள் மூணாறில் இயக்கம்

நான்கு சுற்றுலா பஸ்கள் மூணாறில் இயக்கம்

மூணாறு : மூணாறில் இருந்து சுற்றுலா பகுதிகளுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நான்கு சுற்றுலா பஸ்கள் இயக்கப்படுகின்றன.மூணாறில் சுற்றுலா பகுதிகளுக்கு கேரள அரசு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் தெரிவித்தார். அதன்படி சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டிப்போவில் இருந்து சுற்றுலா பகுதிகளுக்கு ' பேக்கேஜ்' அடிப்படையில் நான்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதன் விபரம் வருமாறு

l மூணாறு - -வட்டவடை வழி: மாட்டுபட்டி அணை, குண்டளை அணை, டாப் ஸ்டேஷன், கோவிலுார். புறப்படும் நேரம்: காலை 8:45 மணி.l மூணாறு -- சைலன்ட்வாலி - -லெட்சுமி எஸ்டேட் வழி: நெற்றிக்குடி, சைலன்ட்வாலி, சிக்னல் பாய்ன்ட், தேவிகுளம், லெட்சுமி எஸ்டேட். புறப்படும் நேரம்: காலை 10:00 மணி.l மூணாறு - -சூரியநல்லி வழி: தேவிகுளம், பெரியகானல் நீர்வீழ்ச்சி, சூரியநல்லி, லெட்சுமி எஸ்டேட், புலி குகை. புறப்படும் நேரம் : காலை 9:30 மணி.l மூணாறு -- மாங்குளம் -- ஆனக்குளம் வழி: லெட்சுமி எஸ்டேட், விரிபாறை, புலிகுகை, மாங்குளம், பெரும்பன் குத்து, ஆனக்குளம். புறப்படும் நேரம்: மதியம் 1:00 மணி. அனைத்து பஸ்களிலும் கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.400. கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வமான onlineksrtcswift.comஎன்ற இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களை 98470 27060, 98950 86324 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ