பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
பெரியகுளம்: பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 40 சிலைகளுடன் நடந்த ஊர்லத்தில் வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர்.பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி ஊர்லம் பூஜையுடன் துவங்கியது. நகரம், ஒன்றிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்த 40 விநாயகர் சிலைகள் ஒன்றிணைந்து அரசு போக்குவரத்து டெப்போ அருகே ஊர்வலம் துவங்கியது. கவுன்சிலர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். விழா குழு தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் விஷ்ணு பிரியன் முன்னிலை வகித்தார். தேனி வடக்கு மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜன் ஆகியோர் பேசினர்.வடகரை, தென்கரை முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக சென்று, பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் படித்துறை அருகே வராகநதியில் சிலைகள் கரைக்கப்பட்டன. எஸ்.பி., சிவ பிரசாத், ஏ.டி.எஸ்.பி.,க்கள் வினோஜி, சுகுமார்டி.எஸ்.பி., நல்லு மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் வெங்கடேசன், ராஜேஷ் முருகன், முத்துப்பாண்டி,கோபி கண்ணன், ரவிக்குமார், சஞ்சீவிராமர், வீரபத்திரன் உட்பட ஹிந்து முன்னணி, பா.ஜ.,வினர் செய்திருந்தனர்.