மேலும் செய்திகள்
கல்லுாரி விளையாட்டு விழா
28-Feb-2025
கூடலுார் : 'தங்கத்தில் முதலீடு செய்வதை விட பெண் கல்விக்காக முதலீடு செய்வது சிறந்தது ', என கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அன்னை தெரசா மகளிர் பல்கலை பதிவாளர் சீலா பேசினார்.ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரி பட்டமளிப்பு விழா செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இணைச்செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முன்னிலை வகித்தனர். முதல்வர் ரேணுகா வரவேற்றார். அன்னை தெரசா மகளிர் பல்கலை பதிவாளர் சீலா மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:'நாம் வாழக்கூடிய இந்த வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். மாணவிகள் சமுதாய உயர்வுக்காக உழைத்து சாதனை நிகழ்த்த வேண்டும். காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல் நீக்கி நேரத்தை வீணடிக்காமல் மன உறுதியுடன் படித்து சாதனை நிகழ்த்த வேண்டும். நல்ல விஷயங்களுக்கு மட்டும் மொபைல் பயன்படுத்த வேண்டும். பெற்றோருக்கும் சமுதாயத்துக்கும் பெருமை தேடித் தர வேண்டும். தங்கத்தில் முதலீடு செய்வதை விட பெண் கல்விக்காக முதலீடு செய்வது சிறந்தது என்றார்.2020 -- 23ம் கல்வியாண்டில் இளங்கலை படித்த 244 மாணவிகள், முதுகலை படித்த 31 மாணவிகள் என 275 மாணவிகளுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பல்கலை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 6 மாணவிகளுக்கு தங்கப் பதக்கமும், இரண்டாம் மதிப்பெண் பெற்ற 6 மாணவிகளுக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது.கல்லுாரி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், பொன்னுராம், சக்தி வடிவேல், அனைத்து துறை விரிவுரையாளர்கள், அலுவலர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
28-Feb-2025