உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு, உயர்கல்வி ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். உயர்மட்டகுழு உறுப்பினர் அன்பழகன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சந்திரன், மோகன், பெத்தணக்குமார், தொடக்க கல்வி ஆசிரியர் மன்ற மாநில நிர்வாகி பெரியசாமி, சத்துணைவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பவானி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுரேந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார், சி.ஐ.,டி.யு., மாவட்ட செயலாளர் ராமசந்திரன், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை