மேலும் செய்திகள்
சிவகங்கையில் மார்ச் 8ல் தேசிய மக்கள் நீதிமன்றம்
05-Mar-2025
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மார்ச் 8 ல் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)நடக்க உள்ளது. பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி வட்டாரங்களுக்கு உட்பட்ட சார்பு நீதிமன்றங்கள், தேனி மாவட்ட நீதிமன்றங்களிலும் லோக்அதாலத் நடக்க உள்ளது. தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதிகள்,வழக்கறிஞர் உறுப்பினர்களை கொண்ட அமர்வுகள் முன்னிலையில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சம்பந்தமாகநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள், சொத்து, பணம் சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீட்டு வழக்குகள், காசோலை, நுகர்வோர் சேவை பாதிப்பு வழக்குகள், வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்து விசாரித்து தீர்வு காணப்பட உள்ளன. இதில் பங்கேற்று தீர்வு காணலாம் என முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
05-Mar-2025