உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தென்னை மரத்தில் டூவீலர் மோதி ஒருவர் பலி

தென்னை மரத்தில் டூவீலர் மோதி ஒருவர் பலி

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் முத்து 56, கூலி தொழிலாளி. நேற்று தேவதானப்பட்டியில் உள்ள தனது சித்தப்பா துரையை பார்த்துவிட்டு தனது டூவீலரில் தர்மராஜபுரம் திரும்பினார். அய்யனார்புரம் கோட்டைமடை ஓடை அருகே சென்ற போது கட்டுப்பாடு இழந்த இருசக்கர வாகனம் அப்பகுதியில் இருந்த தென்னை மரத்தில் மோதியதில் தலையில் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மகன் சின்னகாமாட்சி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ