உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடன் பிரச்னையால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை -ஆசிரியர் மகன் ஆஸ்பத்திரியில்...

கடன் பிரச்னையால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை -ஆசிரியர் மகன் ஆஸ்பத்திரியில்...

கூடலுார்: கடன் பிரச்னையால் விஷம் குடித்து ஆசிரியரின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். ஆசிரியர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தேனி மாவட்டம், கூடலுார் ஜக்கனநாயக்கர் தெருவை சேர்ந்தவர் கணேசன் 77. இவரது மனைவி கிருஷ்ணம்மாள் 75. இவர்களுடைய மகன் சிவக்குமார் 43. கூடலுாரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். சிவக்குமாரின் மனைவி கடந்த சில ஆண்டுகளாக இவரை விட்டு பிரிந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடன் அதிகமாக இருப்பதால் குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் விஷம் குடித்துள்ளனர். இதில் கணேசன், கிருஷ்ணம்மாள் இருவரும் உயிரிழந்தனர். சிவக்குமார் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூடலுார் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !