குறையும் பெரியாறு அணை நீர்மட்டம் தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு குறைப்பு
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 378 கன அடியாக குறைக்கப்பட்டது.கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழையின்றி அணைக்கு நீர்வரத்து 'ஜீரோ' ஆக உள்ளது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 116.50 அடியானது. (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 1997 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் குறைந்து வருவதால் தமிழகப் பகுதிக்கு 400 கன அடியாக திறக்கப்பட்டிருந்த நீர் திறப்பு 378 கன அடியாக குறைக்கப்பட்டது.லோயர்கேம்பில் துவங்கும் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் மிக குறைவாக ஓடுகிறது. ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் உறைகிணறு அமைத்து நேரடியாக பம்பிங் செய்து குடிநீர் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. லோயர்கேம்ப் நீர் மின் நிலையத்தில் 36 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 34 ஆக குறைந்தது.