உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆளுமை திறன் பயிற்சி முகாம்

ஆளுமை திறன் பயிற்சி முகாம்

போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில்ஐ.ஏ.எஸ்., அகாடமி, வேலை வாய்ப்பு வழிகாட்டி பயிற்சி மையம் சார்பில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு, மென்திறன், ஆளுமை திறன் பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரி தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமநாதன், செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் கபேஷ் வரவேற்றார்.சுய விபர குறிப்பு தயாரித்தல், குழு விவாதம், திறன், நல்ல மனோபாவத்தை வளர்த்தல், பாலின முக்கியத்துவம், நேர்காணல் போதுகடை பிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினர்.பேராசிரியர்கள் உட்பட 1200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை