போக்சோவில் தொழிலாளி கைது
உத்தமபாளையம் : கம்பம் கெஞ்சையன் குளப் பகுதியில் வசிப்பவர் சதாம் உசேன் 31, இவர் இதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். குழந்தைகள் நல அலுவலர் நிவேதினி புகாரின்பேரில் உத்தம பாளையம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் நாகசாந்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சதாம் உசேனை கைது செய்தார்.