போலீஸ் செய்திகள்..
விபத்தில் என்.சி.சி., மாஸ்டர் காயம்தேனி: கூழையனுார் மேற்குத்தெரு ரமேஷ் 41. இவர் மதுரை இடையபட்டியில் உள்ள என்.சி.சி., முகா மில் என்.சி.சி., மாஸ்டராக பணிபுரிகிறார். பணி முடிந்து மதுரையில் இருந்து வீட்டிற்கு டூவீலரில் சென்றார். குமுளி திண்டுக்கல் பைபாஸ் ரோடு போடேந்திரபுரம் விலக்கு அருகே செல்லும் போது, கேரளா, பி.டி.ஆர்.., நகர்வண்டமேடு பகுதியை சேர்ந்த வாலிபர் ராகுல் 20, ஓட்டி வந்த லாரி மோதியது. இதில் என்.சி.சி., மாஸ்டர் காயமடைந்தார். தேனி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வீரபாண்டிோலீசார் ராகுல் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.கணவர் தற்கொலை: மனைவி புகார்கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே தும்மக்குண்டைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் 40, இவரது கணவர் முருக்குமாயி மார்ச் 3ல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் தற்கொலை குறித்து மனைவி கடமலைக்குண்டு போலீசில் புகார் செய்துள்ளார். அதில் 'வாலிப்பாறை தண்டியகுளத்தை சேர்ந்த சிங்கம் 50, என்பவர் கஞ்சா வழக்கில் ஜெயிலுக்குப் போக காரணமாக இருந்ததாக தெரிவித்து முருக்குமாயை பொது இடத்தில் செருப்பால் அடித்ததாகவும், இதுகுறித்து மனைவியிடம் தெரிவித்த முறுக்குமாயி மன உளைச்சலில் இருந்ததாகவும், மன உளைச்சல் மற்றும் தற்கொலைக்கு காரணமான சிங்கம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க,' வலியுறுத்தியுள்ளார்.வீட்டு வாடகைதாரரை அடித்த உரிமையாளர் மீது வழக்குபெரியகுளம்: சருத்துப்பட்டி வடக்கு தெரு லாரி டிரைவர் குமரேசன் 42. அதே பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி 45. வீட்டில் 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்தார். 20 நாட்களுக்கு முன் வீட்டை காலி செய்து அதே பகுதியில் வேறொருவர் வீட்டிற்கு குடியேறினார். வீட்டிற்கு வெளியே நின்றிருந்த குமரேசனிடம், சின்னச்சாமி 'என் வீட்டை காலி செய்து விட்டு என் வீட்டிற்கு எதிரே குடியிருக்கிறாயா' என அவதூறாக பேசி கட்டையால் குமரேசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். சின்னச்சாமி மனைவி வைத்தீஸ்வரியும் குமரேசனே கையால் அடித்து காயப்படுத்தினர். காயமடைந்த குமரேசன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தென்கரை போலீசார் சின்னச்சாமி, வைத்தீஸ்வரி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ஆன்லைன் டாக்சி டிரைவர் மீது தாக்குதல்மூணாறு: கேரளா, கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஆன் லைன் டாக்சி டிரைவர் ஜிஜூ ஜெயன் 21. இவர், மூணாறுக்கு சுற்றுலா பயணிகளை காரில் அழைத்து வந்து தங்கும் விடுதியில் விட்டு, விட்டு சொந்த ஊர் திரும்பினார். அவரது காரை சிலர் வழி மறித்து ஜிஜூஜெயனை தாக்கினர். அவர், மூணாறு போலீசில் புகார் அளித்தார். அதன்படி மூணாறைச் சேர்ந்த ஐந்து டிரைவர்களுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ஆன்லைன் டாக்சி வருகையால், மூணாறைச் சேர்ந்த சுற்றுலா கார் டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. அதனால் ஆன்லைன் டாக்சி டிரைவர்களுக்கும், உள்ளூர் கார் டிரைவர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடதக்கது.பெண்ணை ஏமாற்றி டூவீலரை வாங்கி சென்றவர் கைதுதேனி: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ராஜேஷ் மனைவி ஜெயலட்சுமி 38. கணவர் ராணுவத்தில்பணிபுரிகிறார். இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு பிப்.13ல் மனு அளிக்க வந்தார்.அங்கு மனு எழுதித்தரும் நாகேந்திரபாண்டியன் மனு எழுதி தர உதவி புரிந்தார். ஜெயலட்சுமியின் மனுவை வாங்கிச் சென்ற நபர், அதிகாரிகள் மறுநாள் வரக்கூறியதாக தெரிவித்தார்.மறுநாள் அலைபேசியில் ஜெயலட்சுமியை அழைத்து தேனி பஸ் ஸ்டாண்டிற்கு வரச்சொல்லி, அங்குள்ள ஓட்டலில் அமரவைத்தார். ஜெயலட்சுமியின் டூவீலரை வாங்கி அதிகாரிகளை பார்த்து வருவதாக கூறி சென்றவர் திரும்பவர வில்லை. டூவீலரின் மதிப்பு ரூ.20 ஆயிரம். ஏமாந்ததை உணர்ந்த ஜெயலட்சுமி தேனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில் மதுரை காந்திநகர் ஆசாரித் தோப்பை சேர்ந்த நாகேந்திரபாண்டியன் 46, டூவீலரை ஏமாற்றி வாங்கி சென்று ரூ.3 ஆயிரத்திற்கு மதுரையில் அடகு வைத்திருந்தது தெரிந்தது. நாகேந்திரபாண்டியனை நேற்று கைது செய்து டூவீலரை மீட்டனர்.