போடி சி.பி.ஏ., கல்லுாரியில் விளையாட்டு விழா
போடி : போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் விளையாட்டு விழா கல்லூரி செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், சி.பி.ஏ., சங்க நிர்வாக குழு உறுப்பினர் ஞானவேல், கல்லூரி முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் சிவா, பேராசிரியர் முருகேசன் வரவேற்றனர். நிர்வாக குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். விளையாட்டு போட்டியை நிர்வாக குழு உறுப்பினர் பிரபு துவக்கி வைத்தார்.விழாவில் 100 மீ., 200 மீ., 800 மீ., 1500 மீ., 5000 மீ., மற்றும் நீளம், உயரம் தாண்டுதல், ஈட்டி, குண்டு, வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை மாணவர் ஹரி பாலாஜியும், வீராங்கனைக்கான விருதை மாணவிகள் பாண்டிமா தேவி, மோகன வம்சிதா பெற்றனர். மாணவ, மாணவிகளுக்கு போடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மீனாட்சி பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.