அரசு பஸ்சில் பல் டாக்டரிடம் தங்க, வைர நகைகள் திருட்டு
தேனி: பஸ்சில் பயணம் செய்த பல் டாக்டர் டிராவல்ஸ் பேக்கில் வைத்திருந்த ரூ.3.45 லட்சம் மதிப்புள்ள வைரநெக்லஸ் மற்றும் 9 பவுன் தங்க நகைகள் திருட்டு குறித்து தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.அனுமந்தன்பட்டி கருப்பையா கோனார் தெரு பல் டாக்டர் பிரின்ஸ்டன்புருனோ 28. இவர் கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் தனது மனைவியுடன் செப்., 5ல் ரூ.3.45 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ், தங்கநகைகள், துணிகளை டிராவல் பேக்கில் வைத்து உறவினர் திருமணத்திற்கு செல்ல டிராவல் பேக்குடன் அன்று மதியம் 3:30 மணிக்கு உத்தமபாளையத்தில் இருந்து வத்தலககுண்டு செல்ல அரசு பஸ்சில் ஏறினார். தான் அமர உள்ள இருக்கைக்கு மேல் லக்கேஜ் கேரியரில் டிராவல்ஸ் பேக்கை வைத்தார். பின் தேனி புது பஸ் ஸ்டாண்டிற்கு பஸ் 4:30 மணிக்கு வந்தடைந்தது. அப்போது டிராவல் பேக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த டாக்டர், தேனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.