உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வருஷநாடு வனப்பகுதியில் கரடி தாக்கி இருவர் பலி

வருஷநாடு வனப்பகுதியில் கரடி தாக்கி இருவர் பலி

கடமலைக்குண்டு:தேனி மாவட்டம் வருஷநாடு அருகே வனப்பகுதியை ஒட்டி இருந்த விவசாய நிலத்தில், கரடி தாக்கியதில் விவசாய கூலித்தொழிலாளிகள் தங்கம்மாள்புரம் மணிகண்டன், 45, தர்மராஜபுரம் கருப்பையா, 55, பலியாகினர்.வருஷநாடு கோவில்பாறை கண்மாய் அருகே உள்ள அவர்களது நிலத்தில் வசித்து, விவசாயம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சாரல் மழை பெய்தது. அப்போது மணிகண்டன் தோட்டத்தில் இருவரும் எலுமிச்சம் பழங்கள் பறித்து, சாக்குகளில் கட்டி டூ--வீலரில் ஏற்றுவதற்காக நடந்து வந்தனர். திடீரென அந்த வழியாக வந்த கரடி ஒன்று திடீரென கருப்பையா, மணிகண்டனை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'இறந்தவர்கள் உடலில் இருந்த காயங்கள் கரடி தாக்கியதில் ஏற்பட்டதாக தெரியவில்லை. அப்பகுதியில் கரடிகள் வந்து சென்றதற்கான எவ்வித தடயங்களும் இல்லை. எனினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை