உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும்

100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும்

தேனி, செப்.1–தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் பள்ளி தலைமை ஆசியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சி.இ.ஓ., முருகன் முன்னிலை வகித்தார்.  கலெக்டர் பேசுகையில், முதல்பருவ தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான காரணங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். வரும் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இடைநின்ற மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆலோசனை வழங்கி மீண்டும் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும். மாவட்டம் 100 சதவீத தேர்ச்சி பெற்ற மாவட்டம் என்ற நிலையை எட்டுவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்றார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை