உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன்னெச்சரிக்கையாக 121 பேர் கைது

முன்னெச்சரிக்கையாக 121 பேர் கைது

தேனி: திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த இந்து அமைப்பினர் 121 பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கைது செய்தனர்.திருப்பரங்குன்றம் மலையில் மாமிசம் சாப்பிட்டதை கண்டித்தும், பிற மதத்தினர் உரிமை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செல்ல இருந்தனர். இவர்களை நேற்று முன்தினம் முதல் நேற்று வரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். கைது செய்வதை கண்டித்து பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட செயலாளர் அஜித் உள்ளிட்ட நிர்வாகிகள் தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை தேனி போலீசார் கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மதியம் வரை 121 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை