மேலும் செய்திகள்
மனைவியை தாக்கிய கணவர் கைது
24-Dec-2025
தேவதானப்பட்டி: தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் முன்விரோத தகராறில் கல்லுாரி மாணவர் சாய்ஹரிஷ் 20, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 4 சிறுவர்களை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர். தேவதானப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பரோட்டா மாஸ்டர் சரவணன் 48. மகன் சாய்ஹரிஷ். திண்டுக்கல் தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். டிச.,3ல் திருக்கார்த்திகையன்று மலைமேல் சிவன் கோயிலுக்கு சென்றார். டூவீலரில் தேவதானப்பட்டி சுடுகாடு பாதை வழியாக வீட்டிற்கு சென்றபோது எதிரே வந்த பெரியகுளம் கீழவடகரை, கரட்டூரைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 4 பேர் இரு டூவீலரில் சாய்ஹரிஷ் மீது மோதுவதுபோல் சென்றுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது பற்றி சாய்ஹரிஷ் சமூக வலைதளங்களில் 4 பேர் குறித்து பதிவிட்டுள்ளார். இதனால் 4 சிறுவர்கள் முன்விரோதம் கொண்டு சாய்ஹரிைஷ கொலை செய்ய திட்டமிட்டனர். சமாதானம் பேச சாய்ஹரிைஷ வரச்சொன்னார்கள். நேற்று முன்தினம் இரவு தேவதானப்பட்டி அண்ணாநகர் காலனிக்கு சாய்ஹரிைஷ அழைத்துச் சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். டி.எஸ்.பி., நல்லு மேற்பார்வையில் தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார், 4 சிறுவர்களையும் கைது செய்தனர். அவர்களை மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர். தேவதானப்பட்டி வடக்கு தெரு, பெரியகுளம் கரட்டுத்தெருவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
24-Dec-2025