மேலும் செய்திகள்
ஒயர் திருடிய மூவர் கைது
22-Sep-2024
தேனி : தேனி அருகே பூதிப்புரத்தில் திருடிய ஒயர்களை சுடுகாட்டில் எரித்த அதே பகுதியை சேர்ந்த சின்னமுத்து 24, கவியரசன் 24, மணிகண்டன் 25, கோபி 24 ஆகியோரை பிடித்த பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.பூதிப்புரம் அதன் சுற்ற வட்டாரப்பகுதிகளில் ஆடுகள், தோட்டங்களில் மோட்டார் உள்ளிட்டவை தொடர்ந்து திருடு போவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு பூதிப்புரம் ராமக்காரன் தெரு சென்ட்ரிங் தொழிலாளி சின்னராஜ் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஒயர்கள் திருடு போயின. நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள சுடுகாட்டில் ஒயர்களை சிலர் எரித்துக்கொண்டிருப்பதை சின்னராஜ் பார்த்து அங்கு சென்றார். அவரை பார்த்ததும் வாலிபர்கள் சிலர், அவரை தள்ளிவிட்டு ஓட முயற்சித்தனர்.அதற்குள் அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் சின்னமுத்து, கவியரசன், கோபி, மணிகண்டனை பிடித்தனர்.சிலர் தப்பி ஓடினர். பிடிபட்டவர்களை பழனிசெட்டிபட்டி போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். சின்னராஜ் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Sep-2024