மாவட்டத்தில் உயர்கல்வியில் சேராத 477 மாணவர்கள்
தேனி: மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 5221. இதில் கடந்தவாரம் வரை உயர்கல்வியில் சேர்ந்தவர்கள் 4550 பேர். தலைமை ஆசிரியர்கள் எமிஸ் பதிவில் உயர்கல்வியில் சேராத மாணவர்களின் எண்ணிக்கை குறித்துபதிவிடுகின்றனர். இதன்படி தற்போது வரை மாவட்டத்தில் 477 மாணவர்கள் உயர்கல்வியில் சேராமல் உள்ளது கண்டறியப்பட்டன. இவர்களை உயர்கல்வியில் சேர்க்க பெற்றோர், மாணவர்களிடம் கல்வி துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.