உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கார்கள் மோதிய விபத்தில் 8 பேர் காயம்

கார்கள் மோதிய விபத்தில் 8 பேர் காயம்

பெரியகுளம்; பெரியகுளம் அருகே சபரிமலை சென்ற காரும், கோயிலுக்கு சென்று திரும்பிய காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர்.கர்நாடகா மாநில ஐயப்ப பக்தர்கள் 4 பேர் சபரிமலைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி பிரிவில் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு இரு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்தது. இதில் இரு கார்களிலும் பயணம் செய்த செல்வம் 55, தினேஷ் 40, புட்றட் 33, ரங்கநாத் 33, சதீஷ்குமார் 31, உட்பட எட்டு ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி