உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரவில் கலெக்டர் அலுவலக நுழைவாயில்களை பூட்ட முடிவு தேவையின்றி வருவோருக்கு அபராதம்

இரவில் கலெக்டர் அலுவலக நுழைவாயில்களை பூட்ட முடிவு தேவையின்றி வருவோருக்கு அபராதம்

தேனி : தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில்களை இரவில் பூட்ட முடிவு செய்துள்ளதாகவும், தேவையின்றி வளாகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு அபாரதம் விதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தேனி கலெக்டர் அலுவலகம் மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. நகர்பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள திட்ட சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிலர் கலெக்டர் அலுவலகம் வழியாக சென்று வந்தனர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெரிசலும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்பட்டது. விடுமுறை நாட்களில் சிலர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டனர். இதனால் தீபாவளி விடுமுறையில் 4 நாட்கள் கலெக்டர் அலுவலகத்தின் இரு நுழைவாயில்களும் பூட்டப்பட்டன.இனி அனைத்து நாட்களும் இரவு 9:00 மணி முதல் காலை 7:00 மணி வரை நுழைவாயில்கள் பூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேவையின்றி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு அபாரதம் விதிக்க போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை